You are here

குஜராத்தைக் குறிவைக்கும் பயங்கரவாதம்

குஜராத் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தாக்குதல் நடத்தத் திட்ட மிட்டு வருவதாக சில தகவல் களை மேற்கோள் காட்டி ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் போன்றோர் தேர்தல் பிரசாரங் களில் ஈடுபட உள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் என்பதால் இந்திய உளவுப் பிரிவு விழிப்படைந்துள் ளது.

குஜராத் கடலோரப் பகுதி களின் வழியே பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்து தேர்தல் பிர சாரக் கூட்டங்களில் 2008 நவம் பர் 26 போன்ற தாக்குதலை மேற் கொள்ளக்கூடும் என இந்திய உளவுத் துறையினருக்குத் தெரிய வந்துள்ளது. அண்மையில் குஜராத் கட லோரப் பகுதியில் கடற்துறையின் அனைத்துலக எல்லையில் நான்கு இந்திய மீன்பிடிப் படகுகளை பாகிஸ்தானின் ராணுவத்தின்ர் பிடித்து வைத்ததோடு படகுகளைச் செலுத்திய இந்திய மீனவர்களின் ஆதார் அட்டை போன்ற அடையா ளங்களைப் பறித்துக்கொண்டனர்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதலுக்கான சூழல் அதிகரித் திருப்பதாக இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர். குஜராத் கடற் பகுதியை அண்மைக் காலமாக பயங்கரவாதச் செயல்களுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையினர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் குஜராத் மீனவர் களுக்கு உயிர் மரபணு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய கடற் படை எந்தச் சவாலையும் எதிர் கொள்ளும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்திய தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லி கடற் படை உயர் அதிகாரிகள் கருத் தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், “நமது பக்கத்து நாட்டின் கடற்பகுதியில் அண்மைக் கால மாக எதிர்மறை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதனைக் கருத் தில் கொண்டு கடற்படையினர் எப்போதும், எதற்கும் தயாராக இருக்க வேண்டும்,” என்றார்.