You are here

கொரிய போரால் 300,000க்கு மேல் பலியாகக்கூடும்

சியோல்: வட கொரியா- தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில் அந்நாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டால் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படாமலேயே முதல் சில நாட்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கக்கூடும். ‘காங்கிரஷனல்’ ஆய்வு சேவைகள் நடத்திய புதிய ஆய்வறிக்கை இதனைத் தெரிவித்தது. இரு நாடுகளிலும் இருக்கும் மக்கள் தொகையைக் கணக்கில் கொள்ளும்போது, அந்நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் கிட்டத்தட்ட 25 மில்லியன் பேரை அது பாதிக்கும். அவர்களில் குறைந்தது 100,000 அமெரிக்கர்களும் அடங்குவர். மேலும் போர் மூண்ட ஒரு சில நாட்களிலேயே 300,000க்கும் மேற்பட்டோர் உயிர் இழக்கக்கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது.