You are here

ரோஹிங்யா அகதிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய எண்ணம் கொண்டுள்ள பங்ளாதேஷ்

பங்ளாதேஷ் முகாம்களில் தங்கி இருக்கும் ரோஹிங்யா அகதி களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய அந்நாட்டு அரசாங்கம் எண்ணுவதாக செய்தி வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் இது மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. முகாமில் அகதிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கும் வேளை யில், குழந்தைப் பிறப்பை கட்டுப் படுத்துவதற்காக பங்ளாதேஷ் மேற்கொண்ட முயற்சிகள் பலன் இன்றிப் போனதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே முகாம்களில் தங்கியிருப்போருக்கு உணவு, துப்புரவு மற்றும் சுகாதார வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன. இந்நிலையில் குடும்பக் கட்டுப்பாடு இல்லாவிடில் நிலைமை மிகவும் மோசமடையும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாம்களில் இருக்கும் பலருக்கு 19 பிள்ளைகள் வரை இருப்பதுடன் ரோஹிங்யா ஆண் களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பதும் குறிப் பிடத்தக்கது.