You are here

கேட்டலோனிய அரசை கலைத்தது ஸ்பெயின்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பார்சிலோனா: தனி நாடாக நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மீண்டும் நேரடியாக மட்ரிட் அரசாங்கத்தின் கீழ் வந்தது அந்நாட்டின் கேட்ட லோனியா வட்டாரம். ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான கேட்ட லோனியாவின் வட்டார நாடாளு மன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். ஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ்க் கேட்டலோனியா வருவதாக வும், விரைவில் தேர்தல் நடத்தப் பட்டு கேட்டலோனியாவுக்குப் புதிய அரசு தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார் என்று ஏஎப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. ஸ்பெயினில் இருந்து கேட்ட லோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. கேட்ட லோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக் கெடுப்பு வெள்ளிக்கிழமை நடந் தது. இதில் சுதந்திரத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சிகள் இந்த வாக் கெடுப்பைப் புறக்கணித்தன.

தனிக் கொடி, தனி தேசிய கீதம், அதிபர், அமைச்சரவை, காவல் துறை ஆகியவற்றைக் கொண்ட கேட்டலோனியாவின் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி ஆகியவை ஸ்பெயின் அரசின் கீழும், கல்வி, சுகாதாரம், பொருளியல், உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவை வட்டார அரசின் கீழும் உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்