You are here

சோமாலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்; 25 பேர் பலி

  • படம்: ராய்ட்டர்ஸ்

ஆப்பிரிக்க நாடான சோமாலியா வின் தலைநகர் மொகாடி‌ஷுவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்டு இஸ்லாமிய தீவிர வாதிகள் கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 25 பேர் வரை கொல் லப்பட்டனர். மாண்டவர்களில் போலிசாரும் ஹோட்டல் ஊழியர்களும் குடி யிருப்பாளர்களும் அடங்குவர். இறந்தோர் எண்ணிக்கை அதி கரிக்கக்கூடும் என்று தெரிகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் மாறுவேடம் பூண்டு பொதுமக் களுடன் சேர்ந்து தப்பிவிட்டார்கள் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார் கள் என மேஜர் முகமது உசைன் என்ற போலிஸ் அதிகாரி கூறிய தாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனம் தெரிவித்தது.

தாக்குதல் நடத்திய மூவர் பிடிபட்டு இருக்கிறார்கள். இதர இரண்டு பேர் வெடித்துச் சிதறி விட்டார்கள். சனிக்கிழமை மாலை 5 மணிக்கு இந்த முற்றுகைச் சம்பவம் தொடங்கியது. மனித வெடிகுண்டு ஒருவர் காரில் வந்து அதிபர் மாளிகைக்கு 600 மீட்டர் தொலைவில் இருக்கும் ஹோட்ட லில் மோதினார். அதற்குச் சில நிமிடங்களில் பக்கத்தில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற வளாகத் தில் கார் குண்டு வெடித்தது. மொகாடி‌ஷுவில் இரண்டு வாரங்களுக்கு முன் பல வெடி குண்டுகள் வெடித்ததில் 358 பேர் மாண்டனர். அந்தச் சம்பவத்தில் காணாமல்போன 56 பேர் இன்ன மும் கண்டுபிடிக்கப்படவில்லை. சோமாலியாவில் ஐநா ஆதரவுடன் அரசாங்கம் நடந்து வருகிறது. அல்=சபாப் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு அந்த அர சாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு கடுமையான இஸ்லாமிய சட்டத்தை நாட்டில் அமல்படுத்தப் போராடி வருகிறது. இந்தத் தீவிரவாத அமைப்பே சனிக்கிழமை அரங் கேற்றப்பட்ட பயங்கரவாதத் தாக்கு தலுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு உள்ளது.

மனித வெடிகுண்டாக காரில் வந்து ஹோட்டலில் மோதி வெடித்த சம்பவத்தில் காயம் அடைந்த ஒருவருக்குப் பொதுமக்கள் உதவுகிறார்கள். படம்: ராய்ட்டர்ஸ்