You are here

கோழிப்பண்ணை, உரத் தொழிற்சாலை மூடல்

கேலாங் பட்டா: கோத்தா திங்கியில் ஜோகூர் ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள கோழிப் பண்ணை, உரத் தொழிற்சாலை ஆகிய வற்றை மூட ஜோகூர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவை இரண் டும் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் நீரில் மாசு அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீரில் மாசு அதிகரித்திருந்ததால் ஜோகூரின் மூன்று மாவட்டங்களில் சுமார் 1.8 மில்லியன் மக்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது. மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் ஜோகூர் ஆற்றுத் தண்ணீரில் அமோனியாவின் அளவு அதிகரித்திருந்ததற்கு இவ்விரு நிறுவனங்களும் கார ணம் என்று கண்டறியப்பட்டிருப்பது மிக முக்கியமான நடவடிக்கை என்று ஜோகூரின் முதல் அமைச்சர் முகம்மது காலிட் நோர்டின் கூறியுள்ளார்.

எட்டு முகவைகள் நேற்று நடத்திய சிறப்புக் கூட்டத் தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் பேரில் இந்த இரு நிறுவனங்களும் மூடப்படவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டது. ஜோகூர் ஆற்றுத் தண்ணீரில் அமோனியாவின் அளவு அதிக மாக இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டதை அடுத்து சுங்கை ஜோகூர், செமங்கார், டாய் ஹோங் ஆகிய சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு நிறுத் தப்பட்டது.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரிடம் நாள் ஒன்றுக்கு ஆறு மில்லியன் கேலன் தண் ணீரை மலேசியாவுக்கு அதிகப்படி யாகத் தருமாறு கோரப்பட்டது. ஜோகூர் ஆற்றில் மாசு கலந்திருந் ததால் ஜோகூரின் நீர் வழங்கலை முறைப்படுத்தும் அமைப்பான பாடான் கவால்செலியா ஆயர் ஜோகூர்’, சிங்கப்பூரிடம் அப்போது இந்த ‘அவசர கோரிக்கை’யை வைத்தது. கூடுதல் தண்ணீரை பொதுப் பயனீட்டுக் கழகத்தால் (பியுபி) செயல்படுத்தப்படும் ‘ஜோகூர் ரிவர் வாட்டர்வொர்க்ஸ்’ நிறுவனம் வழங்கியது.