You are here

பல் மருத்துவர் பட்டம் பெற்ற 4 மணி நேரத்தில் 3வது குழந்தை பெற்ற டாக்டர் சரிதா

  • டாக்டர் சரிதா.

மலேசியாவின் ஈப்போ நகரில் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஆகக் கடைசிப் பிள்ளையாக பிறந்த டாக்டர் சரிதா சிவராஜனை, 35, அவரின் தோழி களும் உறவினர்களும் ‘சூப்பர் மாது’ என்று வர்ணிக்கிறார்கள். மலாயா பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 22ஆம் தேதி ஞாயிற் றுக்கிழமை பல் மருத்துவராகப் பட்டம் பெற்ற இந்த மாது, அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான்கு மணி நேரத்துக்குள்ளாகவே தன்னுடைய மூன்றாவது பிள்ளையை மருத்துவ மனையில் பெற்றெடுத்தார். பட்டமளிப்பு நாளன்றே அந்த மாதுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.- இருந்தாலும் எப்படியாவது அந்தப் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்த அவர், அதோடு மட்டு மின்றி 18 மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பல்கலைக்கழகத் திற்குச் சென்று தன்னுடைய தலைசிறந்த ஒட்டுமொத்த தனிச் சிறப்பு பட்டதாரி என்ற சான்றித ழையும் பெற்றுக்கொண்டார்.

“பட்டமளிப்பு நாளிலேயே எனக்குப் பெண் குழந்தை பிறந் தது. இதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்,” என்றாரவர். டாக்டர் சரிதாவின் கணவர் ஜி கந்தசாமி, 35, விமானப் பொறி யாளர். பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் ஆயிஷா ஓங்கிட மிருந்து அன்று பிற்பகல் சுமார் 4.50 மணிக்கு டாக்டர் சரிதா பட்டத்தைப் பெற்றுக்கொண்டதும் அவருக்கு பிரசவ வலி அதிகரித் தது-. உடனடியாக தன் கணவரை அழைத்துக்கொண்டு சிரம்பான் சென்றார்.

அங்கு தனியார் மருத்துவமனையில் இரவு 8.18 மணிக்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் அவருக்கு குறுஞ் செய்தி ஒன்று வந்தது. அந்தப் பல்கலைக்கழத்தின் பல் மருத்துவத் துறையில் மற் றொரு விருது வழங்கும் நிகழ்ச் சியில் கலந்துகொள்ள வரமுடி யுமா என்று டாக்டர் சரிதாவின் பேராசிரியர்களில் ஒருவர் குறுஞ் செய்தியில் கேட்டிருந்தார். “உடலில் வலி, வேதனை இருந்தாலும் என் பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக் கும் வகையில் நான் அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண் டேன்,” என்றார் டாக்டர் சரிதா.