You are here

ஏடிஎம் பணத்தைக் காப்பாற்ற அடி வாங்கிய காவலாளி

  • படம்: இந்திய ஊடகம்

கோவா: கோவா மாநில ஏடிஎம் மையம் ஒன்றில் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலாளியை கொள்ளையன் சரமாரியாகத் தாக் கும் சிசிடிவி காட்சிகள் வெளி யாகியுள்ளன. தலைநகர் பானாஜியில் நடை பெற்ற இச்சம்பவத்தில் சுத்தியலால் கொள்ளையன் கொடூரமாகத் தாக் கும் காட்சி காண்போரைப் பதற வைக்கும் வகையில் உள்ளது. ஒரு வழியாகப் போராடி கொள்ளை யனிடமிருந்து சுத்தியலைப் பறித்த காவலாளி திருப்பித் தாக்க முயன்ற போது கொள்ளையன் தப்பியோடி விட்டான். காவலாளியின் இந்தத் துணிச் சலான நடவடிக்கையால் ஏடிஎம் மில் இருந்த பணம் தப்பியது. இந்தக் கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக கோவா போலிசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியைத் தேடி வருகின் றனர். பானாஜியில் காவல்துறை தலை மையகம் அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் கோவா மக்களைப் பீதியடையச் செய்துள் ளது.

முகமூடி அணிந்த கொள்ளையன் காவலாளியை சுத்தியலால் தாக்கினான். படம்: இந்திய ஊடகம்