You are here

கத்தியைத் தீட்டும் ‘சுழல் கூராக்கி’ உடைந்து சிதறியதில் 5 வயது சிறுமி பலி

அலோர் ஸ்டார்: கம்போங் தஞ்சோங் பெசாரில் ஆடவர் ஒருவர் தமது வீட்டுக்கு வெளியே கண்ணாடி வெட்டும் கத்தியைக் கூராக்கிக்கொண்டிருந்தபோது ‘சுழல் கூராக்கி’ உடைந்து சிதறியது. சிதறிய கூரான பாகம் ஒன்று அவரது ஐந்து வயது மகளின் இடது மார்பில் ஆழமாகப் பாய்ந்ததால் சிறுமி பலியானார். 40களில் இருக்கும் முராட் என அறியப் படும் அந்த ஆடவர், தாம் கத்தியை கூராக்கத் தொடங்கிய போது தம்முடைய மகள் வீட்டுக்குள் இருந்ததாகவும் அவர் எப்போது வெளியில் வந்தார் என்பதே தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். உடைந்து சிதறிய கூரான உலோகத் துண்டு தம்முடைய காரில் பட்டுத் தெறித்து, தமது ஒரே மகள் மீது விழுந்ததாக முராட் கூறினார். மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சிறுமி உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். முராட்டுக்கு 12, 18 வயதுகளில் இரு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.