You are here

தெம்பனிஸ் விரைவுச்சாலை விபத்தில் இருவருக்கு காயம்

தெம்பனிஸ் விரைவுச் சாலையில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் காயமுற்றனர். ஒரு சிட்டிகேப் டாக்சி, இரு கார்கள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை இவ்விபத்தில் சிக்கின என்று ‘ரோட்ஸ்.எஸ்ஜி ஃபேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி யிலிருந்து தெரிய வந்துள்ளது. அந்தக் காணொளியில் முன்னால் சென்றுகொண்டிருந்த டாக்சி திடீரென நிறுத்த, அதற்குப் பின்னால் வந்த சிவப்பு நிறக் காரால் உடனடியாக நிறுத்த முடியவில்லை. அது டாக்சியின் பின்புறம் மோதியதைப் பார்க்கலாம். சிவப்பு நிறக் காருக்குப் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காரின் பின்புறத்தில் மோதிய வேகத்தில் பறந்து, காருக்கு முன் வந்து விழுந்தார். காலை 8.50 மணிக்கு நடந்த விபத்தில் காயமுற்ற இருவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.