You are here

கட்சியில் சேர நடிகை கஸ்தூரிக்கு திமுக, வி.சிறுத்தைகள் அழைப்பு

  • நடிகை கஸ்தூரி

சென்னை: திமுகவில் சேரும்படி நடிகை கஸ்தூரிக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதுகுறித்து அவர் ஆலோ சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள் ளது. அண்மைக் காலமாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து அதிரடியான கருத்துகள் தெரிவித்து வருகிறார் கஸ்தூரி (படம்). மேலும் அரசியல் கட்சிகள், தலைவர்களின் செயல்பாடுகளையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடைய குடும்ப உறுப்பினர் கஸ்தூரியை நேரில் சந்தித்துப் பேசியதாக வும், அப்போது திமுகவில் சேர அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதேபோல் அழைப்பு விடுத்துள்ளது.