You are here

பண்பாடற்ற அரசியல் கூடாது: சீமான் வலியுறுத்து

சென்னை: விடுதலைச் சிறுத்தை கள் மீதான பாஜகவின் தாக்கு தல் பண்பற்ற அரசியலைக் காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்கள் நாகரிகமற்றவை என்றும் செய்தி யாளர்களிடம் பேசும்போது அவர் கூறினார். பண மதிப்பிழப்பு நடவடிக் கையை முதலில் வரவேற்ற ஸ்டாலின் தற்போது அதை எதிர்ப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், மாநில அரசையும் விமர்சித்தார்.

“குடும்ப அட்டைகளின் வழி விநியோகிக்கப்படும் சர்க்கரை யின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. இத்தகைய நடவடிக்கையானது பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெறவே வழிவகுக்கும். “இதே நிலை தொடர்ந்தால் நியாய விலைக் கடைகளே இல் லாத நிலை ஏற்படும்,” என்றார் சீமான். எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்ததை வரவேற்ப தாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் கட்சியினர் ஒருவரை யொருவர் தாக்கிக்கொள்வது நாகரிகமற்றது என்றார்.