You are here

டிசம்பர் 21 தேர்தலில் பூஜ்டிமோன் பங்கேற்க ஸ்பெயின் அழைப்பு

பார்சிலோனா: பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் பங்கேற்கலாமென ஸ்பானிய அரசாங்கம் கூறியுள்ளது. திரு பூஜ்டிமோன் பதவிலியிருந்து விலக்கப்பட்டாலும் அரசியலில் தொடர்ந்து நீடிக்கலாம் என ஸ்பெயின் அரசாங்கப் பேச்சாளாரான திரு இனிகோ மென்டெஸ் டி விகோ நேற்று மாட்ரிடில் தெரிவித்தார். இந்த நிலையில் கேட்டலோனியாவின் தலைநகர் பார்சிலோனாவில் கேட்டலோனியா ஸ்பெயினுடன் இணைந்திருப்பதை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டக்காரகள் பலர் நேற்று கூடினர். கேட்டலோனியா வட்டார நாடாளுமன்றத்தைக் கலைத்ததோடு, கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவிநீக்கம் செய்து ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் உத்தரவிட்டார். அதை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி அங்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.