You are here

தண்ணீர்க் குழாய் உடைந்தது; சிராங்கூன் ரோட்டில் இரண்டு தடங்கள் மூடப்பட்டன

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அப்பர் சிராங்கூன் ரோட்டில் நேற்றுக் காலை நேரத்தில் ஒரு தண்ணீர்க் குழாய் உடைந்துவிட் டது. அதைச் சரிபடுத்தும் பணி கள் நடந்து வருகின்றன என்று பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரி வித்தது. அப்பர் சிராங்கூன் ரோட்டில் செங்காங் மற்றும் ஹவ்காங் நோக்கிச் செல்லும் சாலையின் மூன்று தடங்களில் இரண்டு தடங்கள் மூடப்பட்டதாகக் கூறிய இந்தக் கழகம், மாற்று வழிகளில் செல்லும்படி வாகன ஓட்டுநர் களுக்கு ஆலோசனை கூறியிருந்தது.

அப்பர் சிராங்கூன் ரோட்டில் தண்ணீர்க் குழாய் உடைந்து விட்டதாக திங்கட்கிழமை அதி காலை 2 மணிக்குத் தனக்குத் தகவல் வந்ததாகவும் உடனடியாக அதிகாரிகளையும் ஒப்பந்தக்காரர் களையும் தான் அனுப்பியதாகவும் முற்பகலில் அந்தக் கழகம் குறிப்பிட்டு இருந்தது. தண்ணீர்க் குழாய் உடைந்த தன் காரணமாக வாடிக்கையாளர் கள் யாருக்கும் தண்ணீர் வழங்கீடு நிறுத்தப்படவில்லை என்று தெரி வித்த இந்தக் கழகம், குழாயைச் சரிபடுத்தும் பணிகள் திங்கட் கிழமையே முடிந்துவிடும் என்றும் கூறியிருந்தது. அவசரமான சாலைப் பணிகள் காரணமாக அப்பர் சிராங்கூன் ரோட்டில் பேருந்துகள் திருப்பி விடப்படுவதாக எஸ்பிஎஸ் டிரான் சிட் நிறுவனம் நேற்றுக் காலை 6.20 மணிக்கு டுவிட்டரில் தெரி வித்தது.

அப்பர் சிராங்கூன் ரோட்டில் செங்காங், ஹவ்காங் செல்லும் பாதையில் நேற்றுக் காலை உச்சநேரத்தின் போது தண்ணீர்க் குழாய் உடைந்தது. இதனால் அந்தச் சாலையின் இரண்டு தடங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்