You are here

தூய்மையான குடியிருப்புக்கு ரொக்கப் பரிசு

மதுரை: டெங்கிக் கொசுக்களை உற்பத்தி செய்வதாகக் கூறி பொது மக்கள், தனியார் நிறுவனங் கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை மாநகராட்சி சற்றே வித்தி யாசமான அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. அதாவது மதுரையில் தங்கள் குடியிருப்பை தூய்மையாக வைத்தி ருந்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் அறிவித்தள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் பேசிய அவர், குப்பைகளை கையாளுவது மாநகராட்சிக்கு சவாலாக இருப்பதாகத் தெரிவித் தார். “நாம் தினமும் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குப்பை களை உருவாக்குகிறோம். ஒவ் வொருவரும் உருவாக்கும் குப்பைகளுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். “மட்கும் குப்பை மற்றும் மட் காத குப்பை எனத் தரம் பிரித்து, குப்பை சேகரிப்போரிடம் வழங்க வேண்டும். மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரித்து வீட்டுத் தோட்டங்களில் பயன்படுத்தலாம்.

அவற்றை மறுசுழற்சி செய்யலாம்,” என்றார் அனீஷ் சேகர். தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான் டெங்கு பாதிப் பும், அது தொடர்பான மரணங்க ளும் அதிகமாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மதுரை அரசு மருத்துவமனை யில் நாளொன்றுக்கு சராசரியாக 650 உள்நோயாளிகள் காய்ச்ச லுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி மேற் குறிப்பிட்ட பரிசை அறிவித்து உற்சாகப்படுத்தி உள்ளது. தூய்மையான குடியிருப்புக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும் இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சமும் மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.