You are here

துவாசில் இரு லாரிகள் மோதல்; 26 பேர் காயம்

  • படம்: ‌ஷின் மின்

துவாசில் இரு லாரிகள் மோதிய விபத்தில் 26 பேர் காயம் அடைந்தனர். துவாஸ் கிரெசண்ட், துவாஸ் சவுத் அவென்யூ 5 சந்திப்பில் காலை 6.30 மணி அளவில் நிகழ்ந்த விபத்தில் வாகனத்தில் சிக்கிய இருவரை குடிமைத் தற்காப்புப் படையினர் விடுவித் தனர். காயம் அடைந்த 26 பேரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் அவர்கள் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் சேர்க் கப் பட்டதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன. லாரி ஓட்டுநர்களில் ஒருவரான கலியமூர்த்தி, சாலை சந்திப்பில் பிரேக் சிக்கிக் கொண் டதால் வாகனத்தை நிறுத்த முடியவில்லை என்றும் முன் பக்கத்தில் இருந்த வாகனத்தின் மீது மோதிவிட்டது என்றும் சொன்னார்.

“எனக்கு எப்படி நடந்தது என்பதே தெரியவில்லை,” என்றார் அவர். நான்கு ஆண்டுகளாக சவுத் ஃபார்வர்ட் கன்ஸ்ட்ரக்‌‌ஷன் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், இத்தகைய விபத்தில் சிக்கியது இதுதான் முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார். காயம் அடைந்த ஊழியர்களில் ஒருவர் மட்டும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். காயம் அடைந்தவர்கள் சீனா, பங்ளாதேஷ், இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வர்கள். இதில் சிங்கப்பூரர்கள் எவரும் காயம் அடையவில்லை.

மோதலில் நசுங்கிய வாகனம். படம்: ‌ஷின் மின்