You are here

கொள்ளுப்பேரன் திருமணத்தில் பங்கேற்ற கருணாநிதி

சென்னை: தமது கொள்ளுப்பேரன் மனோரஞ்சித், நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார் திமுக தலைவர் கருணாநிதி. இத்திருமணம் நேற்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கருணாநிதியின் மகன் மு.க. முத்துவின் மகள் வழிப் பேரன் மனோரஞ்சித். இவருக்கும் விக்ரம் மகள் அக்‌ஷிதாவுக்கும் அண் மையில் திருமணம் நிச்சயமானது. கருணாநிதி உடல்நலம் குன்றி யதால் இவர்களது திருமணத்தை கோபாலபுரம் இல்லத்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, நேற்று காலை நடைபெற்ற திருமணத்தில் கருணாநிதி, விக்ரம் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கிடையே திருமண விழா வில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியும் கலந்து கொண்டார். அவர் கருணாநிதியை தன் மகன் துரை தயாநிதியுடன் தனியே சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார். கடந்த ஓராண்டு காலமாக கருணாநிதி எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. தற் போது அவரது உடல்நிலை ஓரளவு தேறி உள்ளதாக கூறப் படும் நிலையில், கொள்ளுப் பேரனின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த செய்தியும் படங் களும் பல்வேறு ஊடகங்களில் வெளியானதை அடுத்து திமுக வினர் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. 

கருணாநிதியிடம் மணமக்கள் ஆசி பெற்றனர். பின்னர் மணமக்களும் அவர்கள் பெற்றோரும் கருணாநிதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படம்: சதீஷ்