You are here

வடிவமைப்பாளருக்கு உதவ ‘டிசைன் ஆர்ச்சர்ட்’ திட்டம்

சிங்கப்பூரின் புதிய வடிவமைப்பாளர் கள் ஆர்ச்சர்ட் ரோட்டில் மிக முக்கிய இடத்தில் ஒரே கூரையின் கீழ் தங்களுடைய படைப்புகளை காட்சிக்கு வைக்கும் வாய்ப்பைப் பெறவிருக்கிறார்கள். ஆர்ச்சர்ட் கிரீனில் புதிய இரண்டரை மாடிக் கட்டடம் எழும்பு கிறது. உள்ளூர் வடிவமைப்பாளர் களைப் பேணி வளர்த்து அவர்கள் உலகமயமாக உதவுவது இந்தத் திட்டத்தின் நோக்கம். அதேவேளையில், சிங்கப்பூரின் மிக முக்கிய கடைத்தொகுதி பகுதியாக இருக்கின்ற ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்திற்கு உள்ளூர் சுவையைச் சேர்ப்பதும் இந்தத் திட் டத்தின் இலக்கு என்று தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

வர்த்தக, தொழில் (தொழில்) அமைச்சர் எஸ் ஈஸ்வரன் அந்தக் கட்டடத்திற்கான பெயரையும் சின் னத்தையும் நேற்று வெளியிட்டார். கட்டடத்திற்கான நிலம் அகழும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதை அமைச்சர் நடத்திவைத்தார். ஆர்ச்சர்ட் ரோடும் கேர்ன்ஹில் ரோடும் சந்திக்கும் இடத்தில் கட்டப்படும் அந்தக் கட்டடத்திற்கு ‘டிசைன் ஆர்ச்சர்ட்’ என்று பெயர். அதன் முதல் மாடியில் காட்சிக் கூடம் ஒன்று இருக்கும். மேல்மாடி யில் புதிதாக தொழில் தொடங்கு வோருக்கு உதவும் நிறுவனத்திற் கான இடம் அமைந்திருக்கும். அந்தக் கட்டடத்தின் உச்சி மாடி யில் பல நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு இடம் இருக்கும்.

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம், ஜேடிசி கார்ப்பரேஷன், ஸ்பிரிங் சிங்கப்பூர் ஆகிய மூன்று அமைப்பு களும் சேர்ந்து உருவாக்கும் அந் தக் கட்டடத்தை 2018ல் கட்டி முடிக்க திட்டம் இருக்கிறது. உள்ளூர் வடிவமைப்பாளர்கள் டிசைன் ஆர்ச்சர்ட் கட்டடத்தில் தங்கள் படைப்புகளைக் காட்சிக்கு வைக்கலாம் என்று இந்த மூன்று அமைப்புகளும் அழைப்பு விடுத் திருக்கின்றன.