You are here

நஜிப்: டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடினேன்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் சென்ற மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற் கொண்டிருந்தபோது அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகை யில் தங்குவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை திரு நஜிப் புறக்கணித்துள்ளார். “விருந்தினர் மாளிகையில் நான் தங்கவில்லை என்றாலும் திரு டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாட எனக்கு அழைப்பு வந்தது. நாங்கள் இருவரும் கோல்ஃப் விளையாடினோம்.

நான் காரில் ஏறும்வரை திரு டிரம்ப் என்னுடன் நடந்து வந்தார்,” என்று திரு நஜிப் நாடாளுமன்றத் தில் கூறியதாக மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் பயணத்தின்போது திரு நஜிப் ஏன் அனைத்துலக ஹோட்டலில் தங்கினார் என்று எதிர்கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் எழுத்து பூர்வமாக கேட்டிருந்த கேள்விக்கு திரு நஜிப் பதில் அளித்தார்.