You are here

சிங்கப்பூருக்குள் நுழைய இரு போதகர்களுக்குத் தடை

  • படம்: யுடியூப்

சிங்கப்பூரின் பல கலாசார, பல சமயப் பண்புகளுக்கு எதிரான வகையில் போதித்து வருவதால் இரு வெளிநாட்டு இஸ்லாமியப் போதகர்கள் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப் பட்டுள்ளது. அவர்களுள் ஒருவரான ஸிம் பாப்வேயின் இஸ்மாயில் மெங்க், கிறிஸ்மஸ், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது முஸ் லிம்கள் பிற சமயத்தவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்.

பல கலாசாரம், பல சமயங் களைக் கொண்ட சமுதாயங்களில் முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம் களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது இன்னொரு வரான மலேசியாவின் ஹஸ்லின் பஹாரிமின் வாதம். அவ்விருவரும் சமயத்தைக் கருப்பொருளாகக் கொண்ட சொகுசுக் கப்பல் பயணத்தில் பங்குபெற்று சமய போதனைகளை நிகழ்த்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. அடுத்த மாதம் 25ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து கிளம்பும் அந்தச் சொகுசுக் கப்பல் 29ஆம் தேதி மீண்டும் சிங்கப்பூரை வந்தடையும். இந்த நிலையில் அவர்கள் இரு வருக்கும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்), சிங்கப்பூர் சுற்றுலா வாரியம், கடற்துறை, துறைமுக ஆணையம் ஆகிய அமைப்புகளுடன் ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப் பட்டதாக அமைச்சு தெரிவித்தது.

இஸ்மாயில் மெங்க் (இடம்), ஹஸ்லின் பஹாரிம் ஆகிய இருவரும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. படம்: யுடியூப்