You are here

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு: கைது நடவடிக்கை சாத்தியம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் சென்ற ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த அமெரிக்க விசாரணையில் திடீர் திருப்பமாக முதல் குற்றச் சாட்டுகள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முன்னாள் உதவியாளர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கு வதாக தகவல்கள் கூறுகின்றன. 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டோனல்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற் காக ரஷ்யா மறைமுகமாக உதவியதாக கூறப்படும் புகார் தொடர்பில் முதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச் சாட்டு குறித்து விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக் குழு முதல் குற்றச்சாட்டுகள் பதிவை அமெரிக்க பெடரல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள தாக சிஎன்என், ராய்ட்டர்ஸ் ஆகியவை செய்தி வெளியிட்டுள் ளன. எத்தகைய குற்றச்சாட்டுகள்? விசாரணைக் குழுவினர் யாரைக் குறிவைத்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணையில் திடீர் திருப்பமாக முதல் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளையில் உடனடியாக கைது நடவடிக்கை சாத்தியம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.