You are here

ஒப்பனைப்பொருள் தொழிற்சாலைக்கு கிம் வருகை

  • படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தன் மனைவி ரி சோல் ஜூவுடனும் சகோதரி கிம் யோ ஜோங்குடனும் ஒப்பனைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக் கிழமை சென்றிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. கிம்மின் மனைவியும் அவரது சகோதரியும் பொது நிகழ்ச்சி களில் கலந்துகொள்வது அரிது என்பதால் அவர்களை பொது மக்கள் பார்க்க இயலாது.

இந் நிலையில் அவ்விரு பெண்களும் ஒப்பனைப்பொருள் தொழிற்சாலைக்கு சென்றிருந்ததைக் காண்பிக்கும் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங்கிற்கு வடகொரிய அர சாங்கத்தில் அண்மையில் உயர் பதவி வழங்கப்பட்டது. வடகொரியா மீது ஐநா அண்மை யில் பல தடைகளை விதித்த தால் அழகு ஒப்பனைப் பொருட் கள் உட்பட வெளிநாட்டு விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட் களுக்கு வடகொரியாவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வடகொரியா சொந்தமாக ஒப்பனைப் பொருட் களைத் தயாரித்து வருகிறது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தன் மனைவி ரி சோல் ஜுவுடனும் (வலது) தன் சகோதரியுடனும் ஒப்பனைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். படம்: ஏஎஃப்பி