You are here

அமைச்சர் விவியன் இரண்டு நாட்கள் இந்தியா பயணம்

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இரு நாள் இந்தியப் பயணம் மேற் கொண்டு புதுடெல்லிக்கும் கவு காத்திக்கும் செல்கிறார். இந்தியா செல்லும் டாக்டர் விவியன், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் சேர்ந்து இந்தியா = சிங்கப்பூர் இருதரப்பு ஒத்துழைப்பு கூட்டு அமைச்சர் நிலைக் குழுவின் ஐந்தாவது கூட்டத் திற்குத் தலைமை தாங்குவார். அமைச்சரின் பயணம் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கு கிறது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று புதுடெல்லியில் சிங்கப் பூர்=இந்தியா அமைச்சர் நிலை குழுவின் கூட்டம் நடக்கிறது.

அந்தக் கூட்டம் இரு தரப்பு உறவைப் பரிசீலனை செய்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான புதிய ஒத்துழைப்புத் துறைகள் பற்றி அந்தக் கூட்டம் விவாதிக்கிறது. அக்கூட்டத்தை அடுத்து இந்திய வெளியுறவு அமைச்சர், சிங்கப்பூர் அமைச்சருக்கு விருந்தளித்துச் சிறப்பிப்பார். தெற்கு ஆசியா ஆய்வுக் கழகமும் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பும் சேர்ந்து புதுடெல்லியில் ஏற்பாடு செய் துள்ள ‘இந்தியா= சிங்கப்பூர் =ஆசியான்: பொதுவான வரலாறு, பொதுவான எதிர்காலம்’ என்ற சிங்கப்பூர் கருத்தரங்கம் 2017ல் இன்று அமைச்சர் உரை யாற்றுகிறார்.