You are here

உறவை சீர் செய்துகொள்ள தென்கொரியா, சீனா இணக்கம்

சோல்: அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் தென்கொரியாவில் தயார் நிலை யில் வைக்கப்பட்டது தொடர்பில் சீனா- தென்கொரியா உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விரு நாடுகளும் உறவை சீர் செய்துகொள்ள இணக்கம் கண்டுள்ளன. தென்கொரிய வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரி வித்தது. உறவை சீர் செய்து கொள்ளவும் எல்லா துறைகளிலும் ஒத்துழைக்கவும் சீனாவும் தென்கொரியாவும் இணங்கி யுள்ளதாக அமைச்சின் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. வியட்னாமில் நவம்பர் 10, 11 தேதிகளில் நடைபெறவுள்ள ஏபெக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசவிருப்பதாக தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித் துள்ளது.

அந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதத் திட்டம் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்தவுள்ளதாக தென்கொரிய மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் வடகொரியா அணுவாயுத சோதனையை மேற் கொண்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவு கணையையும் வடகொரியா சோதனை செய்தது. வட கொரியாவின் இச்செயல்கள் அந்நாட்டின் நட்பு நாடான சீனாவுக்கு சினத்தை ஏற்படுத் தியது.

வடகொரியா மீது ஐநா கூடுதல் தடைகள் விதிப்பதற்கும் சீனா ஆதரவு தெரிவித்தது. சீனா-வடகொரியா உறவில் ஏற்பட்ட விரிசல், தென்கொரியா வுடன் உறவை சீர் செய்துகொள்ள சீனா இணங்கியதற்கு வழி விட்டிருக்கலாம் என்று கூறப் படுகிறது. இந்நிலையில் நேட்டோ தலைவர் ஜீன்ஸ் ஸ்டோல் டென்பெர்க், வடகொரியாவுக்கு எதிரான தடைகளை ஐநா உறுப்பு நாடுகள் முழுமையாக நடப்புக்கு கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தோக்கியோ சென்றுள்ள அவர் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேயை சந்திப்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.