You are here

1எம்டிபி: இருவருக்கு தடை உத்தரவு

1எம்டிபி: இருவருக்கு தடை உத்தரவு மலேசிய அரசின் நிதியம் 1எம்டிபி தொடர்பிலான சர்ச்சையில் சிக்கிய இருவருக்கு எதிராக சிங்கப்பூர் நாணய ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திரு கெல்வின் ஆங் வீ கெங், திரு லீ சீ வேய் ஆகியோருக்கு ஆறு ஆண்டுகள் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. திரு லீயிடம் 3,000 வெள்ளி லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக மே பேங்க் கிம் எங் செக்கி யூரிட்டிஸின் முன்னாள் பிரதிநிதி யான திரு ஆங் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. பெட்ரோசவூதி ஆயில் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் மதிப் பீட்டு அறிக்கையை விரைவாகத் தயார்படுத்த இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.

தடை உத்தரவின் விளை வாகத் திரு ஆங் சிங்கப்பூரில் எவ்வித நிதி ஆலோசனைச் சேவையும் வழங்க முடியாது. மேலும் சிங்கப்பூரில் உள்ள நிதி ஆலோசனை நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் அவர் இடம்பெற முடியாது. திரு லீக்கும் இதே நிலை. பிஎஸ்ஐ வங்கியின் முன்னாள் சொத்து நிர்வாகியான திரு இயோ ஜியாவைக்கு எதிராக நிரந்தரத் தடை உத்தரவு விதிக்க தமக்கு இருக்கும் நோக்கம் குறித்து அவருக்குத் தெரி வித்துவிட்டதாக ஆணையம் அறி வித்தது. திரு இயோவிடம் 1எம்டிபி விவகாரம் குறித்து வர்த்தக விவகாரத் துறை விசாரணை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், மோசடி போன்ற குற்றங்களைப் அவர் புரிந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

திரு இயோவும் சிங்கப்பூரில் நிதி ஆலோசனைச் சேவைகளை வழங்க முடியாது. நிதி ஆலோ சனை நிறுவனங்களின் நிர்வாகக் குழுவிலும் இடம்பெற முடியாது. ஃபால்கன் பிரைவேட் வங்கியின் சிங்கப்பூர் கிளையின் முன்னாள் நிர்வாகியான திரு யென்ஸ் ஃபிரேட் ஸ்டுர்செனேக் கருக்கு எதிராக விதிக்கப் பட்டிருந்த நிரந்தரத் தடை உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று ஆணையம் அறிவித்துள்ளது.