You are here

சுரங்க தண்டவாளப் பாதை வெள்ளம்: பராமரிப்பு இல்லை; ஊழியர்கள் நீக்கம்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

வடக்கு - தெற்கு எம்ஆர்டி வழித் தட சுரங்கப் பாதையில் அக்டோ பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தை பராமரிப்புப் பணிகளால் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். அந்த வெள்ளப் பெருக்கால் கிட்டத் தட்ட 20 மணி நேரம் ரயில் சேவைத் தடங்கல் ஏற்பட்டது. பராமரிப்புப் பணி அதற்காக வகுப்பட்ட முறைப்படி நடத்தப்பட வில்லை என்று நேற்று எஸ்எம் ஆர்டி நிறுவனம் தெரிவித்தது. டிசம்பர் 2016, இவ்வாண்டின் மார்ச், ஜூன் ஆகிய காலாண்டு களுக்கான ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு சமர்ப்பிக் கப்பட்டுவிட்டன.

இருந்தபோதிலும், இந்த காலப் பகுதிகளில் பீஷான் நுழைவாயில் நிலத்தடித் தொட்டி குழாய்களின் முன்தடுப்புப் பராமரிப்புக்கான தண்டவாள அணுகு முறைக்கு அனுமதி அளிக்கப் படாதது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பிடப்பட்ட பராமரிப்பு தேதிகளில் அந்தக் குழாய்கள் இயக்கப்படவில்லை என்று அதே தேதிகளுக்கான நீர்க் குழாய் தொடர்பான ஆவ ணங்கள் தெரிவிப்பதாக எஸ்எம் ஆர்டி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பராமரிப்புக்குப் பொறுப்பாளர் களான நிர்வாகியும் பணியாளர் களும் வேலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு அவர்கள் உதவி வருவதாகவும் அது குறிப்பிட் டது.

தண்ணீர்க் குழாய் பராமரிப்பில் சுணக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுரங்க தண்டவாளப் பாதையில் மழைநீர் புகுந்தது. அதன் காரணமாக அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்