You are here

இரு கொள்ளையர்களை உருட்டுக்கட்டையால் நையப்புடைத்த இளம்பெண்

  • படம்: தகவல் ஊடகம்

திருப்பூர்: பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர்களை மிகத் துணிச்சலுடன் எதிர் கொண்டு தாக்கி, காவல்துறை யில் ஒப்படைத்துள்ளார் 28 வய தான கஸ்தூரி என்ற இளம் பெண். திருப்பூரில் உள்ள ‘அம்மா’ உணவகத்தில் பணியாற்றி வரும் இவர் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் 3.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அச்சமயம் அவரது வீட்டுக்குள் நுழைந்த 2 திருடர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.8,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த கஸ்தூரி பயத் தில் உதவி கேட்டு சத்தம் போடவில்லை. மாறாக, வீட்டிலிருந்த உருட் டுக் கட்டை ஒன்றை எடுத்து, திருடர்கள் இருவரையும் சரமாரியாக நையப்புடைக்க, அவர் கள் வலி தாங்காமல் சத்தம் போட்டுள்ளனர். இந்தச் சத்தத்தைக் கேட்டு அண்டை வீட்டாரும் தெருவில் சென்றவர்களும் திரண்டு வந்து திருடர்களைப் பிடித்து தெருவில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலிசார் துணிச்சலுடன் செயல்பட்ட கஸ்தூரியைப் பாராட்டினர்.

உருட்டுக் கட்டையால் திருடர்கள் இருவரை நையப்புடைத்த கஸ்தூரி (இடது), பிடிபட்ட இரு திருடர்களை போலிசார் கைது செய்தனர். படம்: தகவல் ஊடகம்