You are here

கிரானைட் முறைகேடு: ரூ.200 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை: கிரானைட் முறைகேடு வழக்கில் தொடர்புடைய இரு நிறுவனங்களின் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உள்ளது அமலாக்கத்துறை. இதேபோல் மேலும் நிறுவனங் களின் சொத்துகளை முடக்கு வது குறித்து அமலாக்கத்துறை பரிசீலித்து வருவதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. மதுரையைச் சேர்ந்த குறிப் பிட்ட இரு நிறுவனங்கள் சட்ட விரோதமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது விசாரணையில் அம்பலமானது. இந்நிறுவனங்கள் ரூ.450 கோடி மதிப்புள்ள அரசு சொத்துகளை மறைமுகமாக அபகரித்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது. இதையடுத்து இந்நிறுவனங்க ளுக்குச் சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள 517 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இதேபோல் மேலும் சில கிரானைட் நிறுவனங் கள் மீது விரைவில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் வலி யுறுத்தி உள்ளார். இது தொடர் பாக வெளியிட்ட அறிக்கையில், இயற்கை வளங்களை பாதுகாக்க இதுவரை நடப்பில் உள்ள சட்டங் களில் போதாமை இருக்கு மானால் அவற்றை திருத்தி வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். “மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.1.11 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கொள்ளை நடந்துள் ளது என்று சகாயம் விசாரணைக் குழு கூறியுள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டவர் களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனை அதிமுக அரசு ஏற்க மறுத்துள்ளது. “எடப்பாடி பழனிசாமி அரசு சட்டத்தின் சந்து, பொந்துகளில் குற்றவாளிகள் தப்பித்துச் செல்ல அனுமதித்திருக்கிறது,” என முத் தரசன் மேலும் தெரிவித்துள்ளார்.