You are here

உளவுத்துறை ஆய்வு: நடிகர்களுக்கு மகிழ்ச்சி; கட்சிகளுக்கு அதிர்ச்சி

சென்னை: முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரனின் செயல்பாடுக ளால் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக மத்திய உளவுத்துறை மேற்கொண்ட ஆய் வில் தெரியவந்துள்ளது. அடுத்த தேர்தலில் அதிமுக வுக்கு வாக்களிக்கப் போவதில்லை என ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 விழுக்காட்டினர் தெரிவித்துள் ளதாக தமிழக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம் திமுக வளர்ச்சி காணவில்லை என்றும் 46 விழுக் காட்டினர் மட்டுமே திமுகவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர் என் றும் அச்செய்தி மேலும் தெரி விக்கிறது. மத்திய உளவுத்துறை தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து அவ்வப்போது விரிவான ஆய்வறிக் கைகளை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில், தற்போது மக்கள் மத்தியில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என உளவுத் துறை அதிகாரிகள் கருத்துக் கணிப்பு பாணியில் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர். அதில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் பல்வேறு தகவல்களை பிரபல தமிழக நாளேடு வெளியிட்டுள்ளது. “பிரபலமாக இருந்து அரசிய லுக்கு தூய்மையான எண்ணத் தோடு வரும் நபரை ஆதரிக்க தயாராக இருப்பதாக 32 விழுக் காட்டினர் தெரிவித்துள்ளனர். “அதில் கமலுக்கு 4%, நடிகர் விஜய்க்கு 9% ஆதரவு கிடைத் துள்ளது. “ரஜினியை ஆதரிப்பதாக 19 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். “எடுத்த எடுப்பிலேயே நடிகர் ரஜினி 19 விழுக்காடு ஆதரவைப் பெற்று அரசியலுக்குள் நுழைந்தால் அவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக இருப்பார்,” என்று அந்நாளேடு தெரிவித்துள்ளது.