You are here

பெட்ரா பிராங்கா வழக்கில் வெற்றி பெறுவோம்: வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

மலேசியாவுக்கு எதிரான பெட்ரா பிராங்கா தீவு தொடர்பிலான வழக் கில் சிங்கப்பூருக்கு வெற்றி கிட் டும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள் ளது. பெட்ரா பிராங்கா தீவு மலேசிய கடற்பகுதியில் இருப்பதால் அதை மலேசியாவுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளிக்க வேண்டும் என மலேசிய அரசாங்கம் அனைத்துலக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதற்குப் பதில் தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூர் தரப்பு ‘முழுமையான பதிலடி தகவல் களை’ அனைத்துலக நீதிமன்றத் திடம் சமர்ப்பித்துள்ளது என்றும் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் சட் டக் குழு மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இனி அனைத்துலக நீதிமன்றம் அறிவிக்கும் வழக்காடு தேதியன்று இரு நாட்டுச் சட்டக் குழுக்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கும். 2008ஆம் ஆண்டில் அனைத் துலக நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பெட்ரா பிராங்கா தீவு சிங்கப்பூருக் குச் சொந்தமானது என்றும் அதற்கு அருகில் உள்ள ‘மிடில் ராக்ஸ்’ எனும் பாறைப்பகுதி மலே சியாவுக்கும் ‘சவுத் லெட்ஜ்’ பாறைப் பகுதி எந்த நாட்டின் கடல் எல்லைக்குள் உள்ளதோ அதற்கு அது சொந்தமாகும் என்றும் தெரி விக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு தீர்ப்புக்குப் பிறகு இரு நாடுகளும் தீர்ப்பின் அம்சங்களைச் செயற்படுத்த இரு நாட்டுக் கூட்டுக் குழுவை அமைத் தன.