You are here

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து வெளியேற மறுக்கும் அகதிகள்

சிட்னி: படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த அகதிகள் பாப்புவா நியூகினியில் உள்ள மனுஸ் தீவிலும் நவ்ரு தீவிலும் உள்ள முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மனுஸ் தடுப்பு முகாம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று பாப்புவா நியூகினி நீதிமன்றம் தீர்ப் பளித்ததைத் தொடர்ந்து அந்த முகாமை நேற்று மூட திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் அந்த முகாமிலிருந்து வெளியேற அகதிகள் மறுத்து வருவதாக தகவல்கள் கூறு கின்றன. அந்த முகாமை மூடுவது மனித உரிமை மீறல் என்று அகதிகள் கூறுகின்றனர். அமைதியான முறை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் அகதிகள் திட்டமிட்டுள்ளதாக பிபிசி தகவல்கள் கூறுகின்றன.

அந்த முகாமிற்கு மின்சார விநியோகம், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் என்றும் பாப்புவா நியூகினி அதிகாரிகள் இன்று காலை அந்த முகாமிற்குள் நுழையக்கூடும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் அகதிகள் சுமார் 600 பேர் அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால் மனுஸ் தீவில் உள்ள தற்காலிக முகாமிற்குச் செல்ல அவர்கள் விரும்பவில்லை. ஆஸ்திரேலி யாவில் அடைக்கலம் புகும் எண்ணத் துடன் படகு மூலம் வரும் அகதிகள் பாப்புவா நியூகினிக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.