You are here

1.37 மி. சிங்கப்பூரர்களுக்கு சிறப்பு பொருள், சேவை வரி பற்றுச்சீட்டு

ஏறக்குறைய 1.37 மில்லியன் சிங்கப்பூரர்கள் $200 வரையிலான பொருள், சேவை வரி பற்றுச்சீட்டை இந்த மாதம் பெறுவர். இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின்போது அறி விக்கப்பட்ட ஒரு தடவை வழங் கப்படும் இந்த சிறப்பு ரொக்கம், குறைந்த வருவாய் குடும்பங்கள் செலவுகளைச் சமாளிக்க உதவும். இதற்காக கிட்டத்தட்ட $280 மில்லியன் தொகையை அரசாங்கம் வழங்குகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப் பட்ட வழக்கமான பற்றுச்சீட்டுக்கு மேலதிகமாக இந்தப் பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் இந்த உதவியை கூடியபட்சமாக $300 வரை ஒருவர் பெறுவர்.

ஏற்கெனவே பொருள், சேவை வரை பற்றுச்சீட்டு அல்லது முன் னைய அரசாங்க நிதி உதவித் திட்டங்களில் பதிவு செய்தோர் இதற்கு பதிவு செய்யத் தேவை யில்லை. பற்றுச்சீட்டுக்கு தகுதி பெறுவோருக்கு இயல்பாகவே தொகை வழங்கப்படும். அத்துடன், பொருள், சேவை வரி பற்றுசீட்டு-= ரொக்கம்/ மெடிசேவ், ஐந்தாண்டு மருத்துவ சேமிப்புக் கணக்கில் நிதிநிரப்பும் திட்டம் ஆகியவற்றுக்குப் பதிந்து கொள்ளாத தகுதி பெறும் சிங்கப்பூரர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவுசெய்து கொள்ளு மாறு நிதி அமைச்சு நினை வூட்டியது. இது குறித்த நினை வூட்டல்களை குறுஞ்செய்தி வழி யாகவோ, அஞ்சல் வழியாகவோ ஜூலை மாதம் பெற்றிருப்பர். மற்றொரு நினைவூட்டலை இம்மாதம் அமைச்சு அனுப்பி வைக்கும். பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுத் திட்டம் குறித்த மேல்விவரங்களை www. gstvoucher.gov.sg என்ற இணையத் தளத்தில் பார்க்கலாம்.