You are here

அடுத்த சில நாட்களுக்கு இடி, மழை

நவம்பர் மாத முதல் பாதியில் இடியுடன் கூடிய மழையை அதிகம் எதிர்பார்க்கலாம். சிங்கப்பூர் வானிலை ஆய்வுச் சேவை நிலையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஆறு முதல் எட்டு நாட்கள் வரை பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என்றும் மிதமாகவும் கனமாகவும் அம்மழை இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இடியுடன் பெய்யக்கூடிய மழை மாலை நேரம் வரை நீடிக்கக்கூடும் என்றும் அந்தச் சமயங்களில் பலத்த இடி எதிர்பார்க்கப்படும் என்றும் நிலையம் கூறியுள்ளது. நவம்பர் மாதம் ஆண்டின் இரண்டாவது மழை மாதம் என்பதால் அந்த மாதத்தில் மழை பெய்வது இயல்பு. இருந்தபோதிலும் இந்த நவம்பரில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் வெப்ப நிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு உள்ளது.