You are here

நாடெங்கும் பொருள் சேமிப்பகங்கள்

தளவாடத் துறையை நவீனப் படுத்தும் திட்டங்களில் ஒன்றாக நாடெங்கும் பொருட்களை வைப்ப தற்கான சேமிப்பகங்கள் அமைக் கப் படவுள்ளன. பொருட்களை விரைவாக விநி யோகிக்கவும் சிறிய ஏற்றுமதி யாளர்களின் சரக்கு விநியோ கத்தை சிக்கன மாக்கவும் தகவல், ஊடக மேம்பாட்டு ஆணையம் இரு புதிய திட்டங்களை அறிமுகப் படுத்தி யுள்ளது. துறை சார்ந்த மின்னிலக்கத் திட்டங்களுக்கு இது முன்னோடி யாக அமையும் என ஆணையம் நேற்று கூறியது. தளவாடத் துறைக்கான திட் டத்தை நேற்று அறிவித்த நிதி அமைச்சரும் எதிர்காலப் பொருளியல் மன்றத்தின் தலை வருமான ஹெங் சுவீ கியட், எதிர்காலப் பொருளியல் பற்றி பேசும்பொழுது, மாற்றங்களுக் கிடையே தொடர்ந்து வளர்ச்சிக் கான வாய்ப்புகளைக் கண்டறிவது அவசியம் என்றார்.

மரினா பே சேண்ட்ஸ், கண் காட்சி, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற எதிர்கால பொருளியல் மாநாடு, கண்காட்சியில் பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நடுத்தர மக்களின் அதிகரிப்பு, இந்த வட்டாரத்தில் பெருகி வரும் நகரமயமாதல் போன்றவை நிதித் துறைச் சேவைகள், மைய சேவை கள், தளவாடம், நகரமயமாதல் தொடர்பான தீர்வுகள் போன்ற வற்றுக்கான தேவை அதிகரிக்கும் என்றார்.

இணையம் மூலம் பொருட் களை வாங்குவது அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பொருள் வைக்கும் சேமிப்பகங்கள், வீட் டுக்கு வீடு பொருட்கள் விநியோ கிக்கும் சேவையை மேம்படுத்தும். இதன்மூலம், பொருட்களைப் பெறுவதற்காக ஒருவர் வீட்டில் காத்திருக்க வேண்டியதில்லை. வீடமைப்புப் பேட்டைகள், பொங்கோல், புக்கிட் பாஞ்சாங் ரயில் நிலையங்கள் ஆகிய இடங் களில் அமைக்கப்படவுள்ள 75 பொருள் வைக்கும் சேமிப்பகங் களுக் கான பரிந்துரைகளை நிறு வனங் களிடம் இருந்து ஆணையம் எதிர்பார்க்கிறது.