You are here

சீண்டினால் நிம்மதி பறிபோகும்: எச்.ராஜா பகிரங்க எச்சரிக்கை

மதுரை: அடுத்த சில ஆண்டுக ளில் நாட்டின் வளர்ச்சி அதிகரிக் கும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித் துள்ளார். மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், பாஜகவினரை சீண்டுபவர்கள் அரசியல் களத் தில் நிம்மதியாக இருக்க முடியாது என எச்சரிக்கை விடுத்தார். அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மைக்காலமாக எச்.ராஜா தெரிவிக்கும் கருத்துகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. ‘மெர்சல்’ படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் ராஜா தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜக எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ராஜா. பாஜகவை அதிகமாக விமர் சிக்கும் மேற்கு வங்க அரசிடமே மத்திய அரசு நல்லுறவு பேணுவ தாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக அரசுடன் மத்திய அரசு ஏன் நல்லுறவைப் பேணக்கூடாது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “மதுரையில் பாஜக கொடியை சிலர் எரித்துள்ளனர். இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

இதை நான் மிரட்டுவதற்காகச் சொல்லவில்லை. “பண மதிப்பிழப்பு நடவடிக்கை யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நவம்பர் 8ஆம் தேதி என்பது கறுப்பு தினம். “ஆனால் நாட்டு மக்களுக்கு வளர்ச்சிக்கான பாதையை பாஜக அரசு அமைத்துக் கொடுத்தி ருக்கிறது என்பதே உண்மை,” என்றார் எச்.ராஜா. நல்ல உற்பத்திக்கு நிலம், தொழில், மூலதனம், தொழில் நுட்பம் ஆகியவை அவசியம் என்று குறிப்பிட்ட அவர், உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே பொருளா தார வளர்ச்சி ஏற்படும் என்றார்.