You are here

டிரம்ப்பை கடுமையாக சாடிய வடகொரியா; நேரடி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நாட்டம்

சோல்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆசிய பயணம் இந்த வாரத்தின் இறுதியில் தொடங்கும் நிலையில் வடகொரியா கடுமையான வார்த்தைகளைக் கொண்டு டிரம்ப்பை இழிவு படுத்தியுள்ளது. ‘தீர்க்கப்படாத மனநல பாதிப்படைந்த குழப்பவாதி’ என்று டிரம்ப்பை வடகொரியா கூறியுள்ளது. மன நலம் பாதிக்கப்பட்ட டிரம்ப்பிற்கு தகுந்த மருந்து தேவை என்றும் வடகொரியாவின் ‘கேசிஎன்ஏ’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மை காலமாகவே இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவருக்கொருவர் சாடி வருகின்றனர். கடுமையான வார்த்தை களாலும் பேசிவரும் நிலையில் வடகொரியாவின் அணுவாயுத சோதனைகள் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஆசிய பயணத்தின் போது டிரம்ப் வடகொரியாவை பற்றியும் அதன் தலைவர் கிம் ஜோங் உன் பற்றியும் பேசுவார் என்று நம்பப்படுகிறது. அதற்கான ஆயத்தமாக வடகொரியா இவ்வாறு தாக்கி பேசியுள்ளது. மேலும், அமெரிக்கா வடகொரியாவைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதால்தான் தான் அணுவாயுதங்களை வைத்துள்ளதாக பியோங்யாங் கூறியுள்ளது. இதற்கிடையில், வடகொரியாவுடன் அமைதியான முறையில் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அரசாங்க அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்து வது நேரத்தை வீண் செய்யும் செயல் என் றும் அதை வெளிப்படையாக நிராகரித்து வந்த அதிபர் டிரம்ப்பின் கருத்துகளை மீறி இந்தப் பேச்சு வார்த்தையை அமெரிக்க அரசாங்கத் தரப்பு நடத்தி வருகிறது.