You are here

நியூயார்க்கில் நடையர்கள் மீது லாரியை மோதி 8 பேரைக் கொன்ற 29 வயது இளைஞர்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது லாரியை மோதி 8 பேரைக் கொன்ற சந்தேக நபர் மீது பயங்கரவாதம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தாக அமெரிக்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். நியூயார்க்கில் குறைந்தது 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 29 வயது சைஃபுல்லோ சாய்போவ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பொருட் களையும் வளங்களையும் கொடுத்து ஆதரவு அளித்து வந்த தாகவும் சைஃபுல்லோ சாய்போவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்தாக்குதலை நடத்த சைஃபுல்லோ சாய்போவ் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டிருந்ததாகவும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியை அவர் தேர்ந்தெடுத்திருந்தாகவும் கூறப்படுகிறது.

நியூயார்க்கில் புதன்கிழமை காலை நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்த சந்தேக நபரை போலிசார் துப்பாக் கியால் சுட்டு உயிருடன் பிடித்த னர். சைஃபுல்லோ சாய்போவ் 2010ஆம் ஆண்டில் அகதியாக அமெரிக்காவில் குடியேறிய பின்னர் ஒஹையோ, ஃபுளோரி டாவில் வசித்த அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நியூ ஜெர்ஸியில் குடியேறி யிருக்கிறார். தனியார் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராகவும், சரக்கு வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி வந்த சைஃபுல்லோ ஓட்டிய வாகனத்தில் ஐஎஸ் இயக்கத்தின் கொடியும் ஐஎஸ் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. அவருக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று நியூயார்க் போலிசார் கூறினர்.