You are here

ராக்கைன் மாநிலத்திற்கு ஆங் சான் சூச்சி வருகை

  •  படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் கலவரம் மூண்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர் முதன் முறையாக மியன்மார் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி அம்மையார் அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள பல நகரங்களுக்குச் சென்றிருந்த திருவாட்டி சூச்சி, அங்கு வசிக்கும் சிறுபான்மை இனத் தைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம் என்று அங்குள்ள மக்களை அவர் கேட்டுக்கொண்டார். அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், அரசாங் கத்தின் உதவித் திட்டங்களைப் பற்றியும் அவர்களிடம் எடுத்துக் கூறியதாக தகவல்கள் கூறின.

ராக்கைன் பகுதியில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையும் மியன்மார் அரசாங்கம் செயல்படுத்தவுள்ள தாகவும் அவர் கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு சூச்சி அம்மையார் தனது பயணத்தை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்காமல் இருந்ததற்காக ஆங் சான் சூச்சிக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதனையடுத்து திருவாட்டி சூச்சி, மியன்மாரில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைச் சமாளிக்க தமது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்துலக சமூகம் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் ரோஹிங்கியா முஸ்லிம் கள் வசிக்கும் கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வன்முறையால் பாதிக்கப்பட வில்லை என்றும் கூறியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ராக்கைன் மாநிலத்தில் கலவரம் வெடித்தது. அதனைத் தொடர்ந்து ரோஹிங்யா போராளிகளை ஒடுக்க ராணுவம் கடும் நட வடிக்கைகளை எடுத்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் அகதி களாக அண்டை நாடுகளுக்குச் சென்றனர். ஏராளமான மக்கள் பங்ளாதே‌ஷிற்கு தப்பியோடினர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கலவரம் மூண்ட மியன்மாரின் ராக்கைன் மாநிலத்திற்கு சென்றிருந்த அரசாங்க ஆலோசகரும் ஆளும் கட்சித் தலைவருமான ஆங் சான் சூச்சி அங்கு வசிக்கும் மயோ இன மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். படம்: ஏஎஃப்பி