You are here

‘இரு மருந்துகளை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம்’

முதிய பெண்மணிகள் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பக்க விளை வுகள் காரணமாக இரு மலேசிய மருந்துப் பொருட்களை வாங் கவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று சுகாதார அறி வியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘வான் லிங் ரென் செம் சின் குவோ’ மாத்திரையையும் ‘சொங் காவ் டான்’ எனும் மருந்தையும் சோதனைக்கு உட்படுத்தியதில் அவற்றில் அங்கீகரிக்கப்படாத மேற்கத்திய மருத்துவப் பொருள் இருப்பதைக் கண்டறிந்ததாக ஆணையம் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்தது. வலி, மரத்துப் போதல், சீரான ரத்த ஓட்ட இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்கு ஏற்ற சீனப் பாரம்பரிய மருந்துகள் என அந்த இரு மருந்துகளும் விளம்பரப் படுத்தப்பட்டன.

வயது 70களில் உள்ள மூதாட்டி ஒருவர் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக ‘வான் லிங் ரென் செம் சின் குவோ’ மாத்தி ரையை உட்கொண்டு வந்தார். அதன் பக்கவிளைவாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். வயது 60களில் இருக்கும் மற்றொரு மாது கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக வாரந் தோறும் ‘சொங் காவ் டான்’ எனும் மருந்தை உட் கொண்டு வந்தார். இந்த மருந்தின் பக்கவிளை வாக இவ்வாண்டு இரு முறை அவர் மயங்கி விழ நேரிட்டது. மேலும், இந்த மருந்தை அவர் தொடர்ந்து உட்கொள்ளாவிட்டால் உடல் வலி மீண்டும் ஏற்படு வதோடு அவரது தோலிலும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. அத்துடன் அவரது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையும் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது. “மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அங்கீ கரிக்கப்படாத மேற்கத்திய மருத் துவப் பொருட்கள் அடங்கியுள்ள இதுபோன்ற மருந்துகளை உட் கொள்வதன் மூலம் மோசமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உண்டு,” என சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.