You are here

26 பேர் மரணம்; பலர் காயம்

உத்திரப் பிரதேசத்தின் ரேப ரேலி நகரில் உள்ள அனல்மின் ஆலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் குறைந்தது 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று முன்தினம் நடை பெற்ற இந்தச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாய முற்றனர். இந்த அனல்மின் ஆலை இந்தியாவின் தேசிய அனல்மின் கழகத்துக்குச் சொந்தமானது. வெடித்த கொள்கலன் ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆலையில் பொருத்தப்பட்ட தாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொள்கலன் வெடித்தபோது அதன் அருகில் இருந்த ஊழியர்கள் பல கிலோ மீட்டர் உயரத்துக்குத் தூக்கி அடிக்கப் பட்டதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் குறிப் பிட்டது.

“வெடிப்பில் காயமடைந்த ஏறத்தாழ 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின் றனர். மேலும் பல உடல்கள் க ண் டு பி டி க் க ப் ப ட லா ம் . வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி, தொழில்நுட்ப அதிகாரி ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது,” என்று ரேபரேலி மாவட்ட நீதிபதி சஞ்சே குமார் கட்ரி தெரி வித்தார். காயமடைந்தோரில் பல ருக்கு மிக மோசமான தீக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ரேபரேலி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் தல்ஹா ஷம்சி கூறினார். எனவே, அவர்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் கூடுதல் மருத் துவ வசதி கொண்ட மருத்துவ மனைக்கு இடமாற்றம் செய்யப் படுவர் என்று அவர் தெரி வித்தார்.