You are here

திருவரங்கக் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது

  • திருவரங்கம்

திருவரங்கம்: திருவரங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் கோயிலுக்கு (படம்) யுனெஸ்கோ விருது அறி விக்கப்பட்டுள்ளதை ஒட்டி திருவரங்கம் கோயில் ஊழியர் களும் பொதுமக்களும் நேற்று மாலை கோயில் வாசலில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்றதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை யானதுமான ரெங்கநாதர் கோயில், ஆன்மீகம், சுற்றுலா, புராதன முக்கியத்துவம் வாய்ந்தது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 54 சன்னதிகள் கொண்ட பிரம்மாண்டமான இக்கோயில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டு களுக்கு மேலாக மக்களின் வழிபாட்டில் உள்ள பழமையான இக்கோயிலில் நடந்த திருப் பணிகள் குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யுனெஸ்கோ அமைப்பின் சார் பில் 9 வல்லுநர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.

இக்குழு தனது ஆய் வறிக்கை முடிவு குறித்த அறி விப்பை நேற்று வெளியிட்டது. அதில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடத்தி, புராதன சிறப்பை பாதுகாத்தமைக்குச் சிறப்பு விருது (யுனெஸ்கோ) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அரசு, அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன் வழிகாட்டுதலோடு நடந்த ஆலயத் திருப்பணிகளுக்கு அனைத்துலக அளவில் கிடைத் துள்ள அங்கீகாரம் இது. தமிழ கத்தில் உள்ள கோயில்களில் யுனெஸ்கோ விருது பெறும் முதல் கோயில் இதுதான். அறி விக்கப்பட்ட விருதை யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் விரைவில் நேரில் வந்து வழங்குவார்கள்,” என்று கோவிலின் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்தார்.