You are here

ஆய்வில் மோசடி செய்தவரின் முனைவர் பட்டத்தை மீட்டுக்கொண்ட என்டியு

  • படம்: பையோஸ்டேண்டப்ஸ்/ஃபேஸ்புக்

‘ஏ ஸ்டார்’ அமைப்பில் ஆராய்ச்சியாளராக இருந்த திரு வாட்டி சபீரா பொனாலா தன் னுடைய ஆய்வு, முனைவர் பட்டக் கல்விக்காகச் சமர்ப்பித்த ஆய் வறிக்கை ஆகியவற்றில் பொய் யான தகவல்கள் அளித்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, நன் யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அவருக்கு வழங்கிய முனைவர் பட்டத்தை ரத்து செய்துள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தில் 2013ஆம் ஆண் டில் திருவாட்டி சபீரா முனைவர் பட்டம் பெற்றார். அவர் கல்வி முறைகேடு செய்தது விசா ரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தால் சென்ற மார்ச் மாதத்தில் அவரது முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் ஆக அண்மையில் நிகழ்ந்துள்ள பெரிய அறிவியல் மோசடியான இது, சென்ற ஆண்டு ஜூலை மாதம் கண்டுபிடிக்கப் பட்டது. பொனாலாவின் முனைவர் பட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டது பற்றி ‘ரிட்ராக்ஷன் வாட்ச்’ எனும் இணையப்பக்கத்தில் சென்ற மாதம் 31ஆம் தேதி வெளியிடப் பட்டது. மீட்டுக்கொள்ளப்படும் அறிவியல் வெளியீடுகளை இந்த இணையப்பக்கம் கண்காணிக் கிறது. பொனாலாவை முதன்மை ஆசிரியராகக் கொண்ட மூன்று அறிவியல் வெளியீடுகள் உள் ளிட்ட ஆறு அறிவியல் வெளியீடு கள் மீட்டுக்கொள்ளப்பட்டன. ‘ஏஸ்டார்’ அமைப்பின் சிங்கப்பூர் மருத்துவ அறிவியல் கழகத்தில் பணிபுரிந்த பொனாலா சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சபீரா பொனாலாவுக்கு வழங்கிய பட்டத்தை நன்யாங் தொழில்நுட்பப் பலகலைக்கழகம் மீட்டுக்கொண்டது. படம்: பையோஸ்டேண்டப்ஸ்/ஃபேஸ்புக்