You are here

மின்னிலக்க செய்தி வாசகர்கள் உயர்வு

இணையப் பயன்பாடு வளர்ந்து வரும் சூழலில் சராசரியாக ஒரு மாதத்தில் 84.9 விழுக்காடு பெரி யவர்கள் இணையத்தைப் பயன் படுத்துகிறார்கள். இதில் 52.7 விழுக்காட்டினர் செய்தி, நடப்பு விவகாரம், மின்னி யல் நாளிதழ்களை வாசிக்கிறார் கள். அதே சமயம், 66.8 விழுக்காட் டினர் வாரந்தோறும் உள்ளூர் இணையச் செய்தித்தளங்களில் உலவுகின்றனர். இந்நிலையில், மின்னிலக்க வடிவிலும் அச்சுவழி வெளியீட்டி லும் அதிகம் வாசிக்கப்படும் ஆங்கில நாளிதழாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது என நீல்சன் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூர் ஊடகங்கள் பற்றிய இந்த ஆய்வின்படி, சராசரியாக ஒரு நாளுக்கு அந்நாளிதழ் 28.8 விழுக்காட்டினரால் வாசிக்கப்படு கிறது. மின்னிலக்க வடிவில் 14.7% வாசகர்களும் அச்சு வடிவில் 17.9% வாசகர்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழை வாசிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்ட 4,691 பேர் பங்கேற்றனர். சிங்கப்பூரில் அதிகரித்து வரும் இணைய நடவடிக்கைகளில் மின்னிலக்க செய்தி வாசிப்பு மிக முக்கியப் பங்கினை வகிக்கின்றது. இந்த ஆய்வின்மூலம், ஒட்டு மொத்தமாக மின்னிலக்க வடி விலும் அச்சு வடிவிலும் 55.9 விழுக்காட்டினர் செய்தித்தாள் வாசிப்பது தெரியவந்துள்ளது. சராசரியாக 10 பெரியவர்களில் 4 பேர் அச்சு வடிவில் செய்திகளை வாசிக்கின்றனர். மின்னிலக்க வடி வில் மட்டும் 19.5 விழுக்காடு வாசகர்கள் செய்திகளை வாசிக் கிறார்கள்.