You are here

எஸ்எம்ஆர்டி ஊழியர்களுக்குப் பொதுமன்னிப்பு

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுடைய பணிகளில் ஏதேனும் குறை வைத்திருந்தால் தாங்களாகவே முன்வந்து அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும்படி எஸ்எம்ஆர்டி நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்தது. இதற்கான பொதுமன்னிப்புக் காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. வேலையில் ஏதாவது குறைபாடு இருந்து அதை ஊழியர்கள் தாங்களே முன்வந்து ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்குத் தண்டனை ஏதும் இராது என்று நிறுவனம் உறுதி கூறியிருந்தது.

பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்துவிட்டால் நிறுவனம் பரந்த அளவில் பரிசோதனைகளையும் தணிக்கைகளையும் நடத்தும் என்றும் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றுக்குப் பொறுப்பான ஊழியர்கள் தண்டிக்கப்படு வார்கள் என்றும் எஸ்எம்ஆர்டி தெரிவித்து இருக்கிறது. பராமரிப்புப் பணிகளில் ஏற்படக்கூடிய ஓட்டைகளை உடனுக்குடன் அடைப்பதும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று நிறுவனம் குறிப்பிட்டது.