You are here

ஆளில்லா வானூர்திகள்: ஆபத்துகளை தவிர்க்கும் தீர்வுகளை முன்வைக்க அழைப்பு

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் போன்ற மக்கள் நெருக் கமாக வாழும் நகரச் சூழலில் ஆளில்லாத வானூர்திகளும் இதர பறக்கும் சாதனங்களும் பாதுகாப் புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இத்தகைய ஆபத்துகளைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இத்தகைய வானூர்திகளையும் பறக்கும் சாதனங்களையும் பாது காப்பான முறையில் பயன்படுத்த வகை செய்யும் ஏற்பாடுகளை உரு வாக்குவதில் ஆர்வத்துடன் இருக் கும் தரப்புகளுக்கு நேற்று ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கான யோசனைகளைத் தாக்கல் செய்யும்படி போக்குவரத்து அமைச்சும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய மும் அழைப்பு விடுத்துள்ளன.

ஆகாய போக்குவரத்து ஆற் றல்கள், உணர்வு மூலம் ஆபத்து களைத் தவிர்க்கும் தொழில்நுட் பங்கள், வானூர்திகள் நிர்வாகம், ஆளில்லாத வானூர்திகள் போக்குவரத்து நிர்வாகம் போன்ற தீர்வுகளை முன்வைக் கும்படி இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றன. சிங்கப்பூர் போன்ற நகரச் சூழலில் ஆளில்லாத வானூர்தி களை இயக்குவதில் பல சவால் கள் இருக்கின்றன. இவற்றின் காரணமாக மக்க ளுக்கும் சொத்துகளுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு கள் அதிகம் இருக்கின்றன. பூங்காவில் வாடகை இடம்; தோட்டத்தில் பயிர் செய்யலாம் தோட்டத்தில் பயிர் செய்ய நாட்டமுள்ளவர்கள் இப்போது பூங்காக்களில் வாடகைக்கு இடம் எடுத்துச் சொந்தமாக பயிர் செய்யலாம். தேசிய பூங் காக் கழகம் முதல் முறையாக தனது பூங்காக்களில் உள்ள இடங்களை வாடகைக்குக் கொடுக்கிறது.

இந்த 2.5 சதுர மீ. இடங் களை ஆண்டு ஒன்றுக்கு $57 வாடகையில் மூன்றாண்டு களுக்குப் பெறமுடியும். வாட கைக்கு எடுப்போர் அந்த இடத் தில் தங்களுடைய விருப்பப்படி காய்கறி உள்ளிட்ட பலவற்றைப் பயிர் செய்யலாம். 10 பூங்காக்களில் 2019ஆம் ஆண்டுவாக்கில் மொத்தம் இத்தகைய 1,000 தோட்டங்கள் உருவாக்கப்படும் என்று கழகம் தெரிவித்துள்ளது. ‘பழம், காய்கறி பயிர் திட் டம்’ என்ற ஒரு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தோட்டங்களுக்கு இடம் வாடகைக்குக் கொடுக்கப் படுகிறது.

இவான் லோ (நடு) எட்டுமாதம் பயிர் செய்த 25 கிலோ நீர்ப்பூசணி போட்டியில் வென்றது. இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (வலது) பரிசு வழங்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்