You are here

1எம்டிபி விவகாரம்: கோல்டுமேன் சேக்ஸ் குழும ஈடுபாடு பற்றி விசாரணை

மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் கோல்டுமேன் சேக்ஸ் குழுமத்தின் ஈடுபாடு பற்றி சிங்கப்பூர் போலிஸ் விசாரித்து வருகிறது என்று தகவல் அறிந்தவர்கள் கூறினர். போலிசின் பொருளியல் தொடர்பான குற்றச்செயல்களைக் கையாளும் குற்றவியல் விவகாரத் துறையும் அரசு தரப்பு வழக்கறிஞர்களும் அந்த நிறுவனத்தின் இப்போதைய மற்றும் முன்னாள் மேலாளர்களை விசாரித்து இருக்கிறார்கள் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அந்தத் தரப்பினர் தெரிவித்த னர்.

மலேசிய நிதித் துறையாளரான லோ டெக் ஜோவுடன் கூடிய அந்த நிறுவனத்தின் தொடர்புகள் குறித்தும் ஆராயப் பட்டு வருகிறது. 1எம்டிபி தொடர்பிலான நிதிப்புழக்கம் பற்றிய குற்றவியல் புலன்விசாரணையின் ஒரு பகுதியாக புலன்விசாரணை யாளர்கள் இந்த நிறுவனத்தின் இப்போதைய, முன்னாள் ஊழியர்களை விசாரித்து வருகிறார்கள். புலன்விசாரணை இந்த வங்கியின் மீது ஒருமித்த கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்கள் கூறினர்.