You are here

ஈவிகேஎஸ்: மோடியின் காலில் விழுந்தால் இரட்டை இலை

பழநி: தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் “பிரதமர் மோடியின் காலில் யார் அதிக நேரம் விழுந்து கிடக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும்,” என்று தெரிவித்துள்ளார். பழநியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அமைச்சர்கள் பேசுவது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் உள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் கொசுவை ஒழிக்க டெல்லியில் இருந்து மருத்துவர்களை அழைத்துள் ளதாகக் கூறுகிறார். கொசுவை ஒழிப்பது டாக்டர் வேலை இல்லை. ஒருநாள் மழைக்கே சென்னை மிதக்கிறது.

2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்காமல் மணல் கொள்ளை, கட்டட வேலைகளில் கமிஷன் பேசுகின்றனர். இருக்கிற வரை நாட்டை கொள்ளையடிப்பதில் குறியாக உள்ளனர். அதிக நேரம் யார் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்களோ அவர்களுக்குதான் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும்,” என்று தெரிவித்தார்.