You are here

யுனெஸ்கோ உடன்பாட்டை அங்கீகரிக்க சிங்கப்பூர் ஆயத்தம்

யுனெஸ்கோ அமைப்பு 2003ல் ஏற்படுத்திய ஓர் உடன்பாட்டை அங்கீகரிப்பது குறித்து சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது என்று கலாசார, சமூக இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூருக்கே உரிய சீரிய கலாசார பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து வருவதாக அவர் கூறினார். யுனெஸ்கோ உடன்பாடு, மேடைக்கலைகள், கலாசார வழக்கங்கள், பராம்பரிய கைவினைக்கலைகள் முதலான பாரம்பரிய அம்சங்களைக் கட்டிக்காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘கண்கூடற்ற கலாசார பாரம்பரிய பாதுகாப்பு உடன்பாடு’ என்ற யுனெஸ்கோவின் உடன்பாட்டை அங்கீகரிப்பதன் மூலம் அந்த உடன்பாட்டின் நிபந்தனைகளை சிங்கப்பூர் நிறைவேற்றவேண்டும். சிங்கப்பூர் தன்னுடைய சொந்த பாரம்பரியத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனை. இதற்குக் கைமாறாக ஐநா அமைப்பும் இதர நாடுகளும் இந்த முயற்சிகளில் சிங்கப்பூருக்கு உதவும்.