You are here

கடலில் கலந்ததால் மழை நீர் வீணானது

சென்னை: சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் வேளையில் இரண்டு நாட்களாக பெய்த மழை நீரும் கடலில் கலந்து வீணானது. கூவம், அடையாறு ஆறுகள் ஆகியவற்றின் வழியாக கடந்த இரண்டு தினங்களில் 3.75 டிஎம்சி அளவுக்குக் கடலில் மழை நீர் கலந்து வீணாகியது. அதே சமயத்தில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 20 விழுக்காடு கூடத் தண்ணீர் நிரம்ப வில்லை. இதற்கு தமிழக அரசு போதிய அடிப்படை வசதிகள் செய்யாததே காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 26ஆம் தேதி தமிழகத் தில் வடகிழக்குப் பருவமழை துவங்கியது.

இதையடுத்து சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 29ஆம் தேதி இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சிறிய நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வரு கிறது. குடியிருப்புகளில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் மழைநீர் வடிகால், கால்வாய்கள் மூலம் கூவம், அடையாறு ஆறுகள் வழி யாகக் கடலில் கலந்து வரு கின்றன. இந்த வகையில் கடந்த இரண்டு தினங்களாக சென்னை யின் முக்கிய நீர்வழித் தடங்களான கூவத்தில் வினாடிக்கு 6,500 கன அடியும் அடையாறு ஆற்றில் 14,000 கன அடியும் பக்கிங்ஹாம் கால்வாயில் 1,400 கன அடி நீரும் கடலுக்குச் சென்றது.

விருகம்பாக்கம் கால்வாயில் 600 கன அடி நீர் சென்று கொண் டிருக்கிறது. இந்த நீர், கூவத்தில் கலக்கிறது. ஓட்டேரி நல்லாவில் 700 கன அடி நீர் ஓடிக் கொண் டிருக்கிறது. இது, பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது. ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு நாட்களில் கூவம், அடை யாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய மூன்று நீர்வழித்தடங்கள் மூலம் 21,900 கன அடி நீர் வீதம், கடலுக்குச் சென்றுகொண்டிருக் கிறது. இந்த வகையில் கடந்த 48 மணி நேரத்தில் 3.75 டிஎம்சி மழைநீர் வீணாகக் கடலில் கலந்து உள்ளது. ஆனால் சென்னைக்குக் குடி நீர் வழங்கும் புழல், பூண்டி, சோழ வரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 20 விழுக்காடு அள விற்குக் கூட நீர் நிரம்பவில்லை. இது, நேற்று முன்தினம் மாலை வரை இருந்த நிலவரமாகும்.

சென்னை மெரினா கடற்கரையிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்திலும் சிலர் காணாமல்போன வியாபாரப் பொருட்களைத் தேடுகின்றனர். படம்: ஏஎஃப்பி