You are here

அமைதியை ஊக்குவிக்கவேண்டும்: ராணுவ படையினருக்கு ஸி ஜின்பிங் வேண்டுகோள்

  • படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் அமைந்துள்ள சீனா வின் முதல் வெளிநாட்டு ராணு வத் தளம் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஊக்கு விக்கவேண்டும் என்று அங்கு உள்ள ராணுவப் படையினருக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் வீடியோ உரை மூலம் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சீன ராணுவத்தின் 90வது ஆண்டு நிறைவையொட்டி அந்த வெளி நாட்டுத்தளம் திறக்கப்பட்டது. இதுவரை அதிகாரபூர்வமாக அந்தத் தளத்தை தளவாடத் தளமாகத்தான் சீனா விவரித்து வருகிறது.

பெய்ஜிங்கில் உள்ள கூட்டு தளபத்திய மையத்தை நேற்று முன்தினம் பார்வையிட்ட ஸி, ஜிபூட்டி தளத்தின் செயல்பாடு களைப் பற்றியும் அங்கு உள்ள படையினரின் வாழ்க்கை பற்றியும் நன்கு அறிந்துகொண்டதாக ஜிபூட்டியில் பணி புரியும் படையினரிடம் தெரிவித்தார். சீனாவுக்கும் சீன ராணுவத் திற்கும் நல்ல பேரை வாங்கி தரும்படியும் அதிபர் ஸி அவர்களிடம் கூறினார். இந்தத் தளத்தின் கட்டுமானப் பணிகள் சென்ற ஆண்டு தொடங்கின.

ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளுக்கு அமைதி, மனிதாபிமான உதவிக்குச் செல்லும் கடற்படையின் கப்பல் களுக்குத் தேவையான பொருட் களை ஏற்றிகொள்ளும் இடமாக அது செயல்படும். போர்த்திறனை மேம்படுத்திக் கொள்ளும்படியும் போருக்குத் தயார்நிலையில் இருக்கவேண்டும் என்றும் ராணுவப் படையினருக்கு ஸி வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் திறக்கப்பட்ட சீனாவின் முதல் வெளிநாட்டு ராணுவத் தளம். படம்: ஏஎஃப்பி